Thursday 2nd of May 2024 11:49:19 AM GMT

LANGUAGE - TAMIL
-
பொதுத் தோ்தலில் வீணாய்ப் போன     7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள்!

பொதுத் தோ்தலில் வீணாய்ப் போன 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள்!


புதன்கிழமை நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான சுமார் 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள் நிராகரிக்கப்பட்டமையாக உள்ளன.

கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் 140,000 க்கும் குறைவான வாக்குகளே நிராகரிக்கப்பட்ட நிலையில் பொதுத் தோ்தலில் இது பல மடங்காக அதிகரித்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதித் தேர்தல் முடிவுகளின்படி அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 75.89 வீதமாக உள்ளது. இதில் 4.58 வீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக உள்ளன. இது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெறும் 0.85% வீதமாகவே பதிவாகியிருந்தது.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 16,263,885 வாக்காளர்களில், 12,343,309 பேர் வாக்களித்தனர். இதில் 11,598,936 வாக்குகள் செல்லுபடியானவையாகப் பதிவாகியுள்ளன.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE